கோப்பாயில் கப்பம் பெறுவதில் கொடி கட்டிப்பறக்கும் சிறீலங்காவின் தமிழ் காவல் அதிகாரிகள்!

You are currently viewing கோப்பாயில் கப்பம் பெறுவதில் கொடி கட்டிப்பறக்கும் சிறீலங்காவின் தமிழ் காவல் அதிகாரிகள்!

மீன் வியாபாரி ஒருவரிடம் அச்சுறுத்தி லஞ்சம் வாங்கியதாக கோப்பாய் காவல் நிலையத்தில் பணியாற்றும் சில காவல்த்துறையினருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.இந்நிலையில் யாழ்.கல்வியங்காடு, திருநெல்வேலி சந்தை வியாபாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டால் மேலும் பல உண்மைகள் அம்பலமாகும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் ​

இது குறித்து தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத வியாபாரிகள் சிலர் தெரிவிக்கையில் பாதிக்கப்பட்டது ஒரு மீன் வியாபாரி மட்டுமல்ல.இரகசியமாக திருநெல்வேலி, கல்வியங்காடு சந்தைகளில் பொலிஸார் விசாரணைகளை நடத்தினால் பல உண்மைகள் தெரியவரும் என்பதுடன்,இந்த பயணத்தடை காலத்திலும் 4 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம்வரையில் பல மரக்கறி, மீன் வியாபாரிகளிடம் அச்சுறுத்தி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக கூறும் அவர்கள், தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரே இதில் முதன்மையானவர் எனவும் கூறினர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply