யாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
மாவீரர் மாதத்தினை முன்னிட்டு கோப்பாய் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிரமதான பணியில் ஈடுபட்ட போதே குழப்ப நிலை தோன்றியுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)