கோமாளியென இனி குரைத்து பயனில்லை!

You are currently viewing கோமாளியென இனி குரைத்து பயனில்லை!
இனி குரைத்து பயனில்லை…
எங்கள் தலைவன் தங்கத்தலைவன்
சங்கத்தலைவன்
சரித்திரத்தலைவன்
இப்படித்தான்
2009 இற்கு முன்
சிலரின் வார்த்தைகள்
கலை அரங்குகளையும்
இசைப்பாடல்களையும்
நிறைத்தது!
யாரும் நெருங்க முடியா
இடங்களாக இவ்விடங்கள்
இவர்கள் உணர்வுகளை
முட்டியது!
மற்றவரை முன்னுக்கு விடாது வெட்டியது!
ஏன்?
தலைவரின் நேரடிச்சந்திப்பிலும்
இவர்கள் பாதச்சுவடுகளே
முண்டியடித்து நின்றது!
இவர்களை விட
உலகத்தில் உணர்வாளர்களே
இல்லையென்பதுபோல்
இவர்களின் செயற்பாடுகள்
ஒவ்வொன்றும்
அமைந்தது!
பொறி கக்கும் புரட்சிப்பாடல்களாய்
இன்றும் இவர்களின் பாடல்கள்
இனமானத்தை ஊட்டுகிறது!
ஆனால்
2009 இன் பின் அண்ணை இல்லை
வீரச்சாவை அறிவியுங்கோ
விளக்கு வைக்கவேண்டுமென
கொதித்தார்கள்!
வெடித்தார்கள்!
ஆனால்?
அண்ணையின்
அமைப்புகளோ
நாம் ஒன்றையும்
கண்ணால் காணவில்லை
அதனால்
மன்னன் காட்டிய வழியை மதித்து
மண்ணிற்காக தொடர்ந்து
போராடுவோமென
சபதமெடுத்தார்கள்!
இருந்தும்
எட்டப்பன் கேபியோடு சேர்ந்து
அண்ணன் கட்டமைப்புகளை
சிதைக்க துணிந்தார்கள்!
கட்டமைப்பு இல்லையென்றால்
ஒட்டுமொத்த போராட்டமே
ஒடுக்கப்பட்டு ஒற்றரின்
கூடாரமாய் மாறும்
எனும் அபாயத்தால்
திட்டமிடப்பட்ட சிதைப்பை
திடத்தோடு எதிர்தார்கள்
கொண்ட கொள்கை மாறா
மனிதர்கள்!
அதனால்த்தான்
இற்றைவரை இனத்திற்கான
போராட்டத்தை விட்டுக்கொடுக்காது
நடாத்த முடிகிறது!
இல்லையேல்
எழுந்து நடக்க முடியாத
முடமாக மாற்றியிருப்பார்கள்
ஒற்றர்கள்!
ஆனால்
புகழுக்காக ஆடிந்திரிந்த
நூலறுந்த பட்டங்களாக
ஓடி ஒழிந்து
விடுதலைப்புலிகளுக்கு
எதிரான சக்திகளோடு
கைகோர்த்து தாம்
அறிவார்ந்த சமூகமென
இன்னும்
தம்மை பெருமையாக பேசும்
முதுகு முறிந்த கூட்டம்
ஒன்று!
இற்றைவரை மாவீரரின்
தியாகத்தை போற்றி
அண்ணன் காட்டிய வழியில்
தடம் புரளாமல் பயணிப்பதால்
கோமாளி என்று கொக்கரிக்கின்றார்கள்!
அடேய்
ஓடிய குதிரையில் ஏறி ஓடிவிட்டு
அடிபட்டு விழுந்தவுடன்
குதிரையை குற்றுயிராய்
துடிக்கவிட்டு ஓடி ஒழிந்தது
மட்டுமல்லாது
அவர்கள் தியாகத்தை விமர்சித்து வாழும்
இரண்டகரல்ல நாம்!
இன்னும் இனமானத்தோடு
எமக்காய் வாழ்ந்தவரின் வழிகாட்டுதலை
போற்றி வாழ்பவர்!
என்று
விடுதலைப்புலிக்கு எதிரான சக்திகளோடு
கூட்டுச்சேர்ந்தீரோ
அன்றே நீங்கள்
உப்பில்லா பண்டம்
இனி
குரைத்தும் பயனில்லை!!!
✍தூயவன்
பகிர்ந்துகொள்ள

Leave a Reply