கோவிட் 19 தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை!!

You are currently viewing கோவிட் 19 தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை!!

பிலிப்பைன்சில் இதுவரை 13 இலட்சத்து 67 ஆயிரத்து 894 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 23 ஆயிரத்து 809 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 11 கோடி மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்சில் இதுவரை 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என  பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சிறிய குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்கிற சர்வாதிகார போக்கு உடையவர்.

அண்மையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வீதிகளில் சுற்றித்திரியும் நபர்களை சுட்டுக்கொல்ல காவல்துறையினருக்கும், இராணுவத்துக்கும் அனுமதி வழங்கி  வழங்கியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply