கோவையில் நடைபெற்ற, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்துரோக வழக்கு, விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த ஷாஹின் பாக் (Shaheen Bagh) போராட்டத்தில் கலந்துகொண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அந்த உரைக்காகவே தற்போது கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
124 (ஏ) தேச துரோக வழக்கு, 153(ஏ) விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய இரு பிரிவுகளில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.