கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மெலும் தெரிவிக்கையில்,
ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபை கோ குரூப் நாடுகள் வெளியிட்டுள்ளன. குறித்த வரைபு வெளியிடுவதற்கு முதல் இங்கு இருக்கக்கூடிய கட்சிகளும், சிவில் சமூகமும் இணைந்து கடிதம் ஒன்றை மனித உரிமை ஆணையாளருக்கும் உறுப்பு நாடுகளிற்கும் விசேடமாக கோ குரூப் நாடுகளிற்கும் அனுப்பியிருந்தது .
பொறுப்பு கூரல் என்ற விடயம் மனித உரிமை பேரவையிலிருந்து எடுக்கப்பட்டு மேல் இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டாவதாக இலங்கை தொடர்பாக தொடர்ந்து நடக்கின்ற மனித உரிமைகளை அவதானிக்க மனித உரிமை அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும், மூன்றாவதாக நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை திரட்டுவது உள்ளிட்ட விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.