மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் சட்டத்தரணி ரோய் டிலக்சனின் வீட்டிற்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் அவரின் வீட்டின் உடமைகளிற்கும் வீட்டில் நிறுத்தியிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளிற்கும் வாளால் வெட்டி சேதம் விளைவித்துள்ளனர்
இந்தச் சம்பவம் குறித்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் க சுகாஸ் அறிக்கையொன்றில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்ரீதியாக ஒரு சட்டத்தரணியாக தனதுகடமைகளை சட்டதிட்டங்களிற்கு உட்பட்டு வரும் றோய் டிலக்சனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து உரிய தரப்புகள் அனைத்தும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் சட்டத்தரணிகள் தங்கள் கடமைகளை சரிவரச்செய்வதற்கு உரிய சூழலை ஏற்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளானவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
