யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சிங்கள பேரினவாத அரசினால் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்வேறு அடக்குமுறையை முறியடித்தும் போராட்டக்காரர்கள் உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை
யாழ்., வலிகாமம் வடக்கு – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை திறந்து வைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
தையிட்டியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரைக்குக் கலசம் அண்மையில் வைக்கப்பட்டது.
இதையடுத்து விகாரையை அகற்றி தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விகாரையை அடுத்த மாதம் 3ஆம் திகதி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை
இந்த குழப்பகாரர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டால் நான்காம் மாடிக்கு கொண்டு சென்று உங்களுக்கு கடுமையான தண்டனைகளை கொடுப்போம் என்று மிரட்டி போராட்டத்தை திசை திருப்ப முயன்றனர்.
இவ்வாறு திசை திருப்ப முற்பட்டபோது அருகில் இருந்தவர்கள் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியே அகற்றியுள்ளனர். இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.