சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவது தொடர்பான விடயம் உள்ளடக்கப்படும் நிலையில் தேர்தல் புறக்கணிப்பு பரிசீலனை!

You are currently viewing சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவது தொடர்பான விடயம் உள்ளடக்கப்படும் நிலையில் தேர்தல் புறக்கணிப்பு பரிசீலனை!

சிறீலங்கா ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஒற்றையாட்சி முறைமையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவது தொடர்பான விடயம் உள்ளடக்கப்படும் நிலையில், தேர்தலைப் புறக்கணிப்பது என்ற நிலைப்பாட்டினை மீள்பரிசீலனை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்ரெம்பர் 21 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஆதரவைக் கோரி சஜித் பிரேமதாஸ அனுப்பிய கடிதத்திற்கு இன்று (28.08.2024) அனுப்பிவைக்கப்பட்ட பதில் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘கடந்த 76 வருடங்களாக இலங்கையின் அனைத்து மதங்களுக்கும், இனங்களுக்கும் சம அந்தஸ்தை வழங்க மறுத்து, தேசிய இனங்களுக்கிடையில் தீராப் பகையையும் வெறுப்பையும் தீவிரமாக்கி, தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போருக்கு வழிகோலியதுடன் போர் முடிவடைந்து 13 வருடங்களின் பின்னர் நாடு பொருளாதார வங்குரோத்து நிலை அடைவதற்கும் காரணமாக அமைந்தது தற்போதய ஒற்றையாட்சி அரசியல் யாப்பேயாகும்.

எனவே, தோல்வியடைந்த அந்த ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்படாதவரை இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிப்பதில்லை” – என்றுள்ளது.

GalleryGallery

பகிர்ந்துகொள்ள

Leave a Reply