சமாதான முயற்சிகளில் உலக நாடுகள்! சீன அதிபரை சந்திக்கும் உக்ரைனிய அதிபர்!!

You are currently viewing சமாதான முயற்சிகளில் உலக நாடுகள்! சீன அதிபரை சந்திக்கும் உக்ரைனிய அதிபர்!!

உக்ரைன் மீதான, ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையில் நிரந்தர சமாதானத்தை கொண்டுவரும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படும் சமகாலத்தில், மேற்படி இரு நாடுகளுக்குமிடையிலான சமாதான ஒப்பந்தமொன்றுக்கான முன்மொழிவொன்றை சீனா சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சீன அதிபரை சந்திக்கும் முயற்சிகளில் உக்ரைனிய அதிபர் ஈடுபட்டுள்ள அதேவேளை, துருக்கிய அதிபரும், ரஷ்ய அதிபரும் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஓராண்டு தாண்டியும் உக்ரைன் – ரஷ்ய முறுகல் தணியாததால், ஐரோப்பா / மேற்குலகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான சிக்கல்களை எதாவது ஒரு வகையில் தீர்த்து வைக்கவேண்டிய கட்டாயநிலையில் உலகநாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவரீதியில் ரஷ்யாவை பலமிழக்க வைக்கும், அமெரிக்க / மேற்குலகத்தின் பல்லாண்டுகால திட்டத்துக்கு உக்ரைனிய விவகாரம் பயன்படுத்தப்படும் நிலையில், ரஷ்யாவுக்கெதிராக பாவிப்பதற்காக அமெரிக்காவும், மேற்குலகமும் பெருமளவிலான கனரக இராணுவ ஆயுதங்களை வழங்கினாலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகள் மென்மேலும் இறுகிவருகிறதாகவும், ரஷ்யாவுக்கான ஆயுத வழங்கலுக்கு சீனா தயாராவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், களநிலைமை மூன்றாவது உலகப்போருக்கான ஏதுநிலையை உண்டாக்கிவிடுமென அச்சங்கள் பரவலாக எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளிவழங்கும் மேற்குலக நாடுகள், இந்த சமாதான முயற்சியில் இறங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply