சமூகநல கொடுப்பனவுகளுக்கான விதியை இலகுபடுத்தும் நோர்வே அரசு! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing சமூகநல கொடுப்பனவுகளுக்கான விதியை இலகுபடுத்தும் நோர்வே அரசு! “கொரோனா” அதிர்வுகள்!!

நோர்வேயில் “கொரோனா” பரவளையடுத்து, வேலையிழந்தவர்களுக்கான நாளாந்த சமூக கொடுப்பனவு (Dagpenger) க்கான விதிகளில் தளர்வுகளை அறிவித்தது நோர்வே அரசு.

தற்போதுள்ள சிக்கலான சூழ்நிலையில் வேலையிழந்தவர்களுக்கான நாளாந்த சமூக கொடுப்பனவுகளுக்கான உச்சவரம்பை எதிர்வரும் ஜூலை மாதம் வரை நீடித்திருப்பதாக தொழில்த்துறை மற்றும் சமூகநல அமைச்சர், “Torbjørn Røe Isaksen” இன்று தெரிவித்துள்ளார்.

வழமையாக, வேலையிழப்பவர்களுக்கான நாளாந்த சமூகநல கொடுப்பனவுக்கான காலம் 26 வாரங்களாக இருந்துவரும் நிலையில், ஏற்கெனவே நாளாந்த கொடுப்பனவை பெற்றுவந்த நிலையில் குறிப்பிட்ட 26 வாரங்கள் என்ற உச்ச வரம்பை நெருங்கி வருபவர்களுக்கான இந்த உச்ச வரம்பு, எதிர்வரும் ஜூலை மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள