ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தினை வலியுறுத்தும், இந்தக் கடிதத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கையொப்பம் இடுவதால் ஏற்படும் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கும் முகமாக அச்செயற்பாடு கைவிடப்பட்ட நிலையில் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் மட்டும் கையொப்பம் இட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் அனுப்பிய கடிதத்தினை முழுமையாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசுக்கட்சி ஏற்றுக்கொள்வதாக ஏகமனதாக அக்கட்சியின் அரசியல் பீடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயங்களை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான பிரதி செயலாளரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.