சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும்!வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.

You are currently viewing சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும்!வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply