இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி புதிய பிரதமரையும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை ஒன்றையும் நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்ரமசிங்க குறித்த முக்கிய குறிப்பு :-
ரணில் விக்கிரமசிங்க 1993 முதல் 1994 வரையிலும், பின்னர் 2001 முதல் 2004 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். இவர் பிரதமராக இருந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
தமிழர் தாயகத்தில் வெளிப்படையாக சிங்கள மயமாக்கல் நடைபெற்றது
ரணில் விக்கிரமசிங்கவும் சரி, அவர் சார்ந்து நிற்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் சரி அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்களின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வந்திருப்பதைத்தான் வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் நெடுங்காலத் தமிழர் விரோதப் போக்குக்கும், ரணில் விக்கிரமசிங்கவின் நச்சுத்தன்மை கொண்ட தமிழர் விரோதப் போக்குக்கும் அடிப்படை வித்தியாசம் எதுவுமில்லை.நல்லாட்சி அரசாங்கம் என்கின்ற பெயரில் ராஜபக்சக்களை சர்வதேச மன்றத்திலிருந்து பாதுகாத்தும் வந்துள்ளார் ரணில் விக்கிரமசிங்கவும் ஏனைய சிங்களத் தலைமைகள் போன்று பௌத்தப் பேரினவாதத்தின் முகமாக பௌத்தப் கோட்பாட்டில் ஒன்றிணைந்தவர்