சவூதி அரேபிய ஊடகவியலாளரான “Jamal Khashoggi” படுகொலை செய்யப்பட்டமைக்காக சவூதி அரேபிய இளவரசரான “Mohammed bin Salman” மீது, எல்லைகளற்ற நிருபர்கள்” என்ற அமைப்பு வழக்கு தொடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரேபிய இளவரசரான “Mohammed bin Salman” தொடர்பான சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிடுவதிலும், அவர் சம்பந்தப்பட்ட நிழலுலக நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதிலும், சவூதி அரேபிய ஆட்சிமுறைமையை விமர்சிப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வந்த சவூதி அரேபிய ஊடகவியலாளரான “Jamal Khashoggi”, துருக்கியின் “இஸ்தான்புல்” நகரிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்ததையடுத்து, இப்படுகொலைக்கு சவூதி இளவரசர் பொறுப்பேற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே இப்போது, “எல்லைகளற்ற நிருபர்கள்” என்ற ஊடகவியலாளர்களின் அமைப்பொன்று சவூதி இளவரசரே ஊடகவியலாளர் “Jamal Khashoggi” இந்த படுகொலைக்கு காரணமானவரென குற்றம் சாட்டியுள்ளதோடு, அவர்மீது வழக்கும் தொடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
படுகொலையை முற்றாக மறுதலிக்க சவூதி இளவரசர், படுகொலைக்கு அவரே காரணமென ஏறத்தாழ நிரூபிக்கப்படும் நிலை தோன்றியதும், இப்படுகொலைக்கு காரணமானவர்களென சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சவூதி இளவரசரின் “விசேட படையணி” யே, மேற்படி ஊடகவியலாளரின் படுகொலைக்கு காரணமென தெரிவித்துள்ள அமெரிக்கா, சவூதி இளவரசர் இப்படையணியை உடனடியாக கலைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.