சாரதி இல்லாத தானியங்கி பேரூந்துகள் பாவனைக்கு!

You are currently viewing சாரதி இல்லாத தானியங்கி பேரூந்துகள் பாவனைக்கு!

சாரதி இல்லாமல் முற்று முழுதாக தானியங்கி முறைமையில் இயங்கும் பேரூந்து முதல் முறையாக நோர்வேயின் “Stavanger” பெருநகரத்தில் பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. பொதுமக்கள் பாவனைக்காக வழமையான பொதுப்போக்குவரத்தில் இவ்வாறு முற்று முழுதான தானியங்கி பேரூந்து இணைக்கப்படுவது ஐரோப்பிய ரீதியில் இது முதல்முறை என தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஸ்பெய்ன் நாட்டில் இவ்வாறான பேரூந்துகள் பாவனைக்கு எடுக்கப்பட்டிருந்தாலும், பொதுப்போக்குவரத்துக்களில் அவை பாவனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேகம் குறைவாக செல்லக்கூடிய இவ்வகையான பேரூந்துகள் 50 இருக்கைகளை கொண்டவை என்றும், 300 கிலோமீட்டர்கள் வரை செல்லக்கூடியதான மின்கலங்களை கொண்டவையெனவும் தெரிவிக்கப்படுகிறது. சுற்றிலும் இருக்கும் நிலைமைகளை, இப்பேரூந்துகளில் பொருத்தப்பட்டுள்ள “Sensor” அவதானிப்பான்களின் உதவியுடன் வினாடிக்கு 20 தடவைகள் அவதானிக்கும் பேரூந்துகள் எவ்விதமான இடையூறுகளையும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் பயணிக்கக்கூடியவையாகும்.

https://mediaorigin.nrk.no/movingstill/de0e7b14-469a-4dc5-8e7b-14469acdc50c/20220121122327/de0e7b14-469a-4dc5-8e7b-14469acdc50c_1080.mp4

எனினும், விதிகளின்படி இவ்வைவகையான பேருந்துகளில் ஒரு சாரதி பயணம் செய்வாரெனவும், அவசர நிலைமைகளில் பேரூந்து இயக்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் சாரதி கொண்டுவரக்கூடியதாக வசதிகளும் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply