திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி மான்கேணி காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தூங்கியமையால் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சாரதி உட்பட காரில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை
மட்டக்களப்பில் பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் உதவியுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தவரையும், மோட்டார் சைக்கிளையும் மீட்ட சிறீலங்கா காவற்துறையினர், உயிரிழந்தவுடன் பயணித்த இரண்டு நண்பர்களையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக களுவாஞ்சிக்குடிப் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.