அடேய்
சிங்க கொடிகளை நெஞ்சிலும் உடையிலும்
கலையிலும் சுமக்க துடிப்பவர்களே
சற்று நிறுத்துங்கள்!
பணத்துக்கும் பதவிக்கும்
புகழுக்குமாக தன்மான ஆடைகளை கழற்றி வீசிவிட்டு அம்மணமாக
அலையும் மாந்தரே
நில்லுங்கள்!
கொத்துக்கொத்தாய்
துடிப்பிழந்துபோன
எம் உயிர் உறவுகளின்
அவலத்தை விழிப்படைந்து வீழ்த்துங்கள்!
எம்குல பெண்கள் என்பதால் பிணங்களையும் முகர்ந்தனர்!
அரை நிர்வாணமாக
அக்கா தங்கையரை
மானபங்கப் படுத்தி
கொன்றனர்!
ரணங்களும் வலிகளுமாக
தாய்மண்ணில்
இன்னும் மனவுளைச்சலில்
கொஞ்சம் கொஞ்சமாக
சாகிறார்!
உளவியல் மருத்துவரே
ஊமையாய் போகுமளவிற்கு
நஞ்சு கலந்த கொடிய நினைவுகளுடன்
மண்ணிலே இன்னும்
தவிக்கிறார்!
வலிசுமந்தவரின்
உணர்வுகளை மதிக்காத
எந்த கொம்பனையும்
எதிர்ப்போம்!
துளியளவும் மனவுணர்வுகளை
உணரமுடியாத
பிணங்களாக வாழ்பவனை
எங்கள் அகங்களிலிருந்து
அகற்றுவோம்!
மக்கள் செல்வனுக்கு
மனச்சாட்சி உச்சதிலிருந்தால்
ஒருமுறைக்கு
பலமுறை சிந்திக்கவும்
சிந்திய குருதிகளில்
சிரித்து விளையாடிய
சிங்க முகனின்
வாழ்கை வரலாற்றின்
திரைப்படம்
நொந்த தமிழரின்
அங்கத்தில் ஆணியடிப்பதற்கு
சமம்!
நாங்கள்
விரும்பிப்பார்க்கும்
உங்களின் திரைப்படம்
வெறுப்பில் வீழாமல்
நிறுத்திக்கொள்வது
உங்களின்
கடமை!
இனி
எந்த தமிழனும்
சிங்கக்கொடி அங்கிகளை
அணியாது விழிக்க
எண்ணூறு திரைப்படத்தை
தடுப்பது
எங்கள்
பணி!
துடுப்பாட்டத்தில்
தடுக்கி வீழ்ந்து
கொத்துக்கொத்தாக
உயிரெடுத்த
சிங்க அங்கிகளை
அணியும்
தன்மானமற்ற
தமிழர் இனியாவது
சிந்திக்க
சிந்தனைசெய்
மனமே!
விவேகிகாய்
வீணரை வீழ்த்த
மனநிலையை மாற்று
துரோகிகளுக்கு
மானமுள்ள தமிழர்
என்ன செய்வார்
என்பதை
நிலைநாட்டு!
தமிழா நீயும்
முடிவெடு
காற்சட்டைகளிலும்
மேற்சட்டைகளிலும்
சிங்கத்தின் இலச்சினையை
இல்லாதொழிப்போமென
கொண்ட
இலட்சியமாய்
இன்றே
முடிவெடு!
✍தூயவன்