சிங்கப்பூரில் அமைந்துள்ள புற்றுநோயைக் கண்டறியும் நிறுவனமான Biolidics, COVID-19 கிருமித்தொற்றைத் துரிதமாகக் கண்டறியும் புதிய கருவியை அறிமுகம் செய்துள்ளது.
உடல் திரவ மாதிரியைக்கொண்டு நடத்தப்படும் சோதனை முடிவுகளைப் பெறக் குறைந்தது 3 மணி நேரம் காத்திருக்கவேண்டும்.
ஆனால் புதிய கருவி, ரத்த மாதிரிகளைச் சோதித்துப் பத்தே நிமிடத்தில் கிருமித்தொற்றைக் கண்டறியும்.
முழு ரத்த மாதிரியுடன், ரத்தத்தில் உள்ள
serum, plasma போன்ற திரவங்களைக் கொண்டும் அதில் சோதிக்கலாம்.
சோதனை முடிவுகள் 95 விழுக்காட்டுக்கும்-மேல் துல்லியமாக இருக்கும் என்று Biolidics நிறுவனம் தெரிவித்தது.
புதிய கருவியை சிங்கப்பூரில் பயன்படுத்தத் தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது