சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆளும் பீப்பிள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி (PAP) 14வது முறையாக வெற்றியை பெற்றுள்ளது.
1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்தே ஆட்சியை வகித்து வரும் PAP, இம்முறை 97 இடங்களில் 87 இடங்களை வென்று தன்னுடைய ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
தற்போதைய பிரதமர் லாரன்ஸ் வோங், கடந்த வருடம் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொறுப்பேற்றிருந்தார்.
இத்தேர்தலில் அவர் வெற்றி பெற்று, தனது பதவியை உறுதிப்படுத்தியுள்ளார்.
மொத்த வேட்பாளர்களில் 46 சதவீதம் பேர் PAP கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட PAP, அதன் வலிமையை நிரூபித்தது.
மாற்றாகக் கருதப்படும் Workers’ Party, 26 இடங்களில் மட்டுமே போட்டியிட்டு, PAP இழந்த 10 இடங்களை வென்றது.
தற்போது PAP மற்றும் பிரதமர் வோங் மீது பெரும் பொறுப்புகள் விதிக்கப்படுகின்றன. உலகளாவிய வர்த்தக யுத்தத்தால் ஏற்படும் பணியிழப்பு, பொருளாதார மந்த நிலை, மற்றும் விலைவாசி உயர்வு, வீட்டு வசதி பற்றாக்குறை ஆகியவை முக்கியமான சவால்களாக உள்ளன.
பிரதமர் வோங், “உங்கள் வலுவான ஆதரவுக்கு நன்றி. இதை நாங்கள் மதிப்புடன் ஏற்றுக்கொள்கிறோம்,” என கூறி மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார்.