சிங்கப்பூரில் 22 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொரோனா!

  • Post author:
You are currently viewing சிங்கப்பூரில் 22 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொரோனா!

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 90 விழுக்காட்டினர் வெளிநாட்டுத் தொழிலாளர்களாக இருப்பதால் 3 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் தொழிலாளர்கள் அனைவருமே “டார்மிடரி (Dormitory)” எனப்படும் அடுக்கடுக்கான படுக்கைகள் கொண்ட பலர் தங்குமிடங்களில் போதிய வசதியின்றி தங்கியுள்ளார்கள். தற்போது 32,000 பேர் பரிசோதிக்கப்பட்டதில் 22,000 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சிறிய அறிகுறிகளே இருப்பதால் அனைவரும் இம்மாத இறுதிக்குள் சிகிச்சை முடிந்து திரும்புவார்கள் என சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,000 தாண்டியுள்ள நிலையில், வைரசோடு மக்களை வாழப்பழக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறையான சமூகத் தடுப்பாற்றல் எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை (Heard Immunity) கடைபிடிக்கும் திட்டமில்லை என சிங்கப்பூர் கூறியுள்ளது.

பகிர்ந்துகொள்ள