சிங்களம் எங்களை வீழ்த்தவில்லை – அதனால் வீழ்த்தவும் முடியாது. அது நேற்றுப் பிறந்த குழந்தைக்குக் கூடத் தெரியும்.
பிராந்திய அரசுகள் – குறிப்பாக இந்தியாவும், மேற்குலகமும் – குறிப்பாக அமெரிக்காவும் இணைந்துதான் எம்மை வீழ்த்தின.
வீழ்ந்தாலும் ஒரு சின்னஞ் சிறிய தேசமாக இத்தனை பெரிய வல்லரசுகளை எதிர்த்து மண்டியிடாமல் போரிட்டு வீழ்ந்தோமே என்ற கர்வம் எப்போதும் இருந்தே வந்தது.
ஆனால் ஒரு கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா முழி பிதுங்குவதையும், இந்தியா பண்ணும் “கையத் தட்டு/ விளக்கைப் பிடி” அலப்பறைகளையும் பார்க்கும் போது இந்தக் கையாலாதவர்களாலா நாம் வீழ்த்தப்பட்டோம் என்று நினைக்கும் போது பெருத்த அவமானமாக இருக்கிறது.
புலிகளின் ஓர்மத்தின்/ மன வலிமையின்/ உறுதியின் முன்னால் இவர்கள் எல்லோரும் அவர்களின் கால் தூசுக்கு சமன் என்பதை இன்று கொரோனா தோலுரித்துக் காட்டியுள்ளது.
-பரணி-