சிங்கள பேரினவாத அரசு நடத்தியது தமிழின அழிப்பு (Tamil Genocide) என்று பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ் பெண் உமா குமரன் (Uma Kumaran) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் (United Kingdom) இடம்பெறும் பொதுத்தேர்தலில் ஆட்சியமைக்கலாம் என பலமாக நம்பப்படும் தொழிற்கட்சியானது தேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த இரண்டு பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
அந்தவகையில், பிரித்தானியாவின் லண்டனின் (london) புறநகர்ப் பகுதியான ஸ்டார்ட்போர்ட் மற்றும் போவ் (Stratford and Bow) தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக உமா குமரன் போட்டியிடுகின்றார்.
இஸ்ரேல் (Israel) – பாலஸ்தீன போர் தொடர்பில் கருத்து வெளியிடும் போது தமிழீழத்தில் சிங்கள பேரினவாத தமிழர்கள் மீது நிகழ்த்திய தமிழின அழிப்பு குறித்தும் விபரித்துள்ளார்.
காசாவில் (gaza) உடனடியாக போர் நிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.