சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை இப்படி செய்ய முடியுமா .?

You are currently viewing சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை இப்படி செய்ய முடியுமா .?

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில்  யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கஜேந்திரன் கைது தொடர்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவிக்கும் போது,தியாகி திலீபன் அவர்களுடைய நினைவு நாளில் தொடர்ச்சியாக விளக்கேற்றி வருகிறார்கள்.

இந் நிலையில் செல்வராசா கஜேந்திரன் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் பாராது அவரது ஆடைகளை இழுத்த அவரை அடித்து இழுத்து கைது செய்தமை கவலைக்குரிய விடயமும், வேதனைக்குரிய விடயமும் ஆகும்.

இது கண்டனத்திற்கு உரிய விடயம் என்றும்,ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இப்படி என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலமை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை,தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றும் ஒரு,சிங்கள நாடாளுமன்ற உறுப்பினருக்கு இப்படி செய்ய முடியுமா என்றும் அந்த மோசமான செயலை தாம் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அதிகமாக தமிழ் மக்கள் இருக்கின்ற பகுதியில் சிங்கள பொலிஸாரை ஈடுபடுத்தி அவர்கள் தொடர்பாடல் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஏனேன்றால் கஜேந்திரன் தமிழில் சொல்கின்ற விடயங்களை அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply