சிங்கள பெரும்பான்மை கட்சிக்கு வேட்பாளரகியதால் நடந்த துயரம்!

You are currently viewing சிங்கள பெரும்பான்மை கட்சிக்கு வேட்பாளரகியதால் நடந்த துயரம்!

மட்டக்களப்பு ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சியின் மாற்றுத்திறனாளி வேட்பாளர் ஒருவர் மீது வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,ஏறாவூர் பன்சாலை வீதியிலுள்ள வீடொன்றில் குறித்த கட்சியின் வேட்பாளரும் அவரது தாயாரும் வாழ்ந்து வருகின்றனர்.இந்தநிலையில், சம்பவ தினத்தன்று பகல் ஒரு மணியளவில் வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் 6 பேர் ஆதரவு கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.அதன் பின்னர், வேட்பாளரின் தாயாரிடம் சிறுபான்மையான நாங்கள் பெரும்பான்மை இன கட்சியில் போட்டியிடக் கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து, வீட்டினுள் இருந்த வேட்பாளர் வெளியே வந்தபோது, அவருக்கும் ஆதரவு கேட்டு வந்த கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், வேட்பாளர் மீது ஆதரவாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நடந்து வந்த பாதையை மறந்து சொந்த இனத்தை அழித்தவனோடு கூட்டுச்சேர்ந்து சொந்த இனத்திடமே ஓட்டு கேட்பது என்பது இனத்திலுள்ள ஈனர்களால் செய்யப்படும் வேலையாக பார்க்கப்படுகின்றது இப்படியான செயற்பாடுகள் தன்மானத்தமிழர்களை சினம் கொள்ள வைப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply