யாழ்.செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்ட செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நேற்றையநாள்(07) அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் நேற்றையநாள் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்குகொண்டனர்.