முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில், தங்கள் காணிகளிலிருந்து சிங்கள பேரினவாத இராணுவம் வெளியேற வேண்டுமென மக்கள் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தார்கள்.
2009 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, இன்று வரை விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிக்கும்படி மக்கள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும் தமிழர் நிலங்களை விட்டு சிங்கள பேரினவாத இராணுவம் வெளியேற மறுத்துவருகின்றது.