சிரியாவில் ஆப்ரின் நகரில் எண்ணெய் கனரக வண்டி ஒன்றின் மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 40 பேர் பலியாகினர். இவர்களில் 11 குழந்தைகள் மற்றும் 6 துருக்கி ஆதரவு போராளிகள் அடங்குவர்.
இதனை தொடர்ந்து நகரை அடுத்த மஹ்மூதியே பகுதியில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. எனினும் இதில் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் எதுவும் தெரியவரவில்லை. எந்தவொரு அமைப்பும் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.
கடந்த 2018ம் ஆண்டு மார்ச்சில் குர்தீஷ் தலைமையிலான பயங்கரவாதிகளிடம் இருந்து துருக்கி மற்றும் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஆப்ரின் நகரை கைப்பற்றினர் எனபது குறிப்பிடத்தக்கது.