சிரியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகள் 37 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல பயங்கரவாத தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. வடமேற்கு சிரியா மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அல்-கொய்தாவுடன் இணைந்த ஹுராஸ் அல்-தின் குழுவின் உயர்மட்ட தலைவர் உட்பட மேலும் எட்டு பேர் தாக்கப்பட்டதாகவும் னர் என்று அமெரிக்க மத்திய கமாண்ட் கூறியது.
மத்திய சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயிற்சி முகாம் மீதும் அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். நான்கு சிரிய தலைவர்கள் இருந்ததாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
“அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும், கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கவும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறியுள்ளது.
சிரியாவில் அமெரிக்கா கிட்டத்தட்ட 900 அமெரிக்க துருப்புகளை நிறுத்தியுள்ளது. வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கு அமெரிக்கப் படைகள் ஆலோசனை வழங்கிவருகிறது.
இஸ்ரேல் ஏற்கனவே காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது மேற்கு ஆசியாவில் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
ஹமாஸ் மற்றும் ஹாய்ஸ்புல்லாவை ஒழிக்கும் நோக்கில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது.
இச்சூழலில், சிரியா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.