தமிழ் இளையோர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் நெதர்லாந்தில் இன்று (20.04.2024) ஆரம்பமாகி, சிறப்பாக நடைபெற்று வருகிறது.இப்போட்டிகளை தமிழ் இளையோர் அமைப்பு நேர்த்தியாக ஒழுங்கமைத்து முன்னெடுத்து வருகிறது.
தமிழ் இளையோர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் நெதர்லாந்தில் இன்று (20.04.2024) ஆரம்பமாகி, சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இப்போட்டிகளை தமிழ் இளையோர் அமைப்பு நேர்த்தியாக ஒழுங்கமைத்து முன்னெடுத்து வருகிறது.
ஆரம்ப நிகழ்வுகளாக , பொதுச்சுடர் ஏற்றப்பட்டதோடு, தமிழீழத் தேசியக் கொடியினை அனைத்துலத் தொடர்பகப் பொறுப்பாளரால் ஏற்றிவைக்கப்பட்டு,ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு ,மாவீரர் பொது படத்திற்கும் நாட்டுப்பற்றாளர் தியாகச் சுடர் அன்னை பூபதி அவர்களினதும் தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் மேஜர் முரளி அவர்களினதும் திருவுருவப் படங்களிற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் வணக்கம் மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தற்போது அணிகளுக்கிடையிலான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.