05.07.2020
அண்மையில் தமிழத் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் ஐபிசி தொலைக்காட்சிக்கு கொடுத்த செவ்வியொன்றில் தான் பிரான்சில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் 18 பேரைச் சந்தித்துப் பேசியதாக சொல்லியிருந்தார்.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்
வியாபாரிகள் பலர் எம்முடன் இவ்வாறான சந்திப்புகளை ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளை பலர் ஊடாக மேற்கொண்டிருந்தனர். இந்த அரசியல் வியாபாரிகளில் சுமத்திரன் உட்பட சயந்தன்” ஆர்னோல்ட் சிறீதரன்
போன்றோர்கள் முக்கியமானவர்கள்.
தமிழீழ நிழல் அரசானது தீர்க்க சிந்தனையுடன் தமிழர்களின் அரசியல் முகமாக – அன்றைய சர்வதேச அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டுர,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே
தமிழத்; தேசியக் கூட்டமைப்பு. (அதன் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தவர்கள் இன்னும் தாயகத்தில்இருக்கத்தான் செய்கின்றனர்.)
சர்வதேச சூழ்ச்சியாலும், சில தமிழ் அரசியல் வியாபாரிகள் துணையுடனும் சிங்கள பௌத்த பேரினவாதம் 2009 ல் தமிழ் மக்களை இலட்சக்கணக்காக கொன்று தமிழின அழிப்பின் உச்சக் கட்டத்தை அரங்கேற்றியது உலகம் அறிந்ததே.
அதற்குப் பின் அரசியல்பாதையில் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ற்குப் பின் தாங்கொண்ணாத்துன்பத்தில் இருந்த மக்களுக்கான தேவையை, சேவையை மறந்து தமிழத்தேசியத்தையும்ரூபவ் மக்களையும் தமது வியாபாரப் பொருளாகவே பயன்படுத்த ஆரம்பித்தது.
தமது இந்த விலைபோகும் அரசியலுக்குள் புலர்பெயர்ந்த மக்களையும்
இணைத்துக்கொண்டு பயணிக்க பல முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். இந்த தமிழ்த்தேசிய அரசியல் வியாபாரிகள் தேர்தல்க்;காலம் வரும்போதெல்லாம் மக்களை ஏமாற்றும் விதமாக தங்களை, “தமிழீழத் தேசியத் தலைவர்தான்
உருவாக்கினார்” எங்களை தோற்கடித்தால் “தமிழத்தேசியத்தைத் தோற்கடித்தது போலாகும்” அது மாவீரருக்கும் இறந்து போன மக்களுக்கும் செய்யும் துரோகமென்றும் கூறிக்கொண்டார்கள் இறுதியாக 100 நாட்களில் தமிழர்களுக்கான தீர்வை எட்டுவேன் என்று கூறி தமிழ் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இலங்கைத் தீவிலேயே ஆளுமையற்ற முதுகெலும்பிலாதவராக கணிக்கப்படும் மைத்திரி அரசுக்கு துணைபோய் அவர்களிடமிருந்து எதையுமே தமிழ் மக்களுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளாமல் மக்களின் ஊனத்திலும் கண்ணீரிலும் தங்களையும் தங்கள் வளங்களையும் பெருக்கிக்கொண்டதே இவர்கள் செய்த அரசியல் ஆகும்
அத்துடன் சிங்களத்தின் நிகழ்ச்சிநிரலை நியாயப்படுத்தவும் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு
பயணித்துக் கொண்டு ஒப்புக்கு ஜெனீவா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் வந்து மறைமுகமாகவும்ரூபவ் வெளிப்படையாகவும் சிங்கள தேசத்துக்காகவும்ரூபவ் அதனுடைய செயற்பாடுகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் கூறிக்கொண்டுபுலம்பெயர்
நாடுகளில் தாயகவிடுதலையையும் தமிழ் மக்களின் சுபீட்சமான நல் வாழ்வுக்காக பல்வேறு இடர்களையும்நெருக்கடிகளையும் எதிர்கொண்டு பணியாற்றுகின்றவர்களின் பணியையும் முன்வைக்கும் விடயங்களையும்
புறம்தள்ளி தமிழ்மக்களுக்கான தீர்வை தாம் மட்டும் தான் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) தீர்மானிக்க முடியும் என்று சொல்லிச் செயற்பட்டிருந்தனர். புலம்பெயர் நாடுகளில் தாயகத்தின் விடுதலைக்காக பணியாற்றுகின்ற கட்டமைப்புகளைப்பற்றியே தெரியாத தாயக அரசியல்வாதிகளான இவர்கள் அவர்களைப் பற்றி கதைப்பதற்கு
முன்பாகவாவது தம்மை தயார்படுத்தாது கதைப்பதானது “தாமே ராஜா “தாமே மந்திரி என்ற எண்ணமே. அண்மையில் சிறீதரன் பிரான்சில் மக்கள் அவை உறுப்பினர்கள் 18 பேரை தான் சந்தித்ததாக கூறும் உண்மைக்கு புறம்பான
செய்தியாகும்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் சிறிதரன் போன்ற அரசியல் தலைவர்கள் – 2009 க்கு பின் பாராளுமன்றத்தில் ஆற்றிய தணல்பறக்கும் உரைகளும், நாடகங்களும் இன்று மக்கள் ஒன்றும் அறியாததல்ல . அண்மைகாலமாக இவரின் பேச்சுகள் புத்திஜீவிகள் படித்தவர்கள் என்று கூறி தமிழ்மக்களை காலாகாலமாக சிங்களவனுக்கு அடிமையாக வைத்திருக்க சட்டரீதியாக அதனை வகுத்துக் கொடுத்தவர்களை நியாயப்படுத்தியதும்ரூபவ் சோரம்போனதும் தன்னை நம்பிவாக்களித்த
மக்களுக்கு செய்யும் மிகமோசமான நம்பிக்கைத் துரோகமாகும் புலித்தோல் போர்த்திய முகத்துடன் தமிழ் தேசியத்தையும் அதன் உன்னத உயிர்விலையையும் வியாபாரப்பொருளாக மாற்றிக் கொண்டு தற்பொழுது
பயணிக்கும் சிறீதரன் வாயில் வந்தபடி பேசிய பல பொய்களில் இதுவும்; ஒன்றாகும். இவ்வாறு பிரான்சு மக்கள் பேரவையின் பெயரை பயன்படுத்திப் பேசிய பேச்சினை நாம் வன்மையாகவே கண்டிக்கிறோம்.
அன்பான தமிழ் உறவுகளே!
இம்மாதிரியானவர்கள் பணத்துக்காகவும், பட்டத்துக்காவும் பதவிக்காகவும் பொய் முகத்துடன் பொய்களையே பேசித்திரிபவர்கள். தமது பேச்சுக்கள் மூலம் பொய்களை உண்மைகள் போல் சொல்வதை நம்பி இனியும் ஏமாந்துவிடாதீர்கள். காலம் ஒருநாள் இவர்களுக்கு பாடம் புகட்டியே தீரும்.
தாம் அப்பளுக்கற்றவர்கள் என்று கூறி தமிழர்களின் மனதினையும்ரூபவ் எதிர்பார்ப்பையும் பாழாக்கியவர்கள். இவர்கள் பொய்களைப் பேசிக் காலங்களை வீணடித்து தமிழர் தாயகநிலங்களையும், புராதன அடையாளங்களையும் சிங்களம்
கபளீகரம் செய்ய துணை போகின்றனர். இப்புல்லுருவிகள் போன்றவர்கள் பலம் இழப்பதால் தமிழீழ மக்கள் ஒன்றும் அழிந்து போகப்போவதில்லை. மாறாக தமிழ்மக்களின் வாக்குப்பலம் தடம் மாறிப்பயணிக்கும் அனைத்து புல்லுருவிகளுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.
“தாயகம் என்பது தாயிலும் மேலென நினைவில் வைப்போம் இனி தான் என்ற எண்ணமின்றி தமது என்ற எண்ணம்மாற்றிடச் செய்யுங்கள்”.
நன்றி
மக்கள் பேரவை – பிரான்சு