சீன உர நிறுவனம் சிறிலங்காவிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாகக் கோரியுள்ளமை தெரியவந்துள்ளது.
விஞ்ஞான ரீதியான பரிசோதனை முடிவுகளை மீறி, சோதனை முடிவு களைத் தவறாகக் குறிப்பிட்டமை மற்றும் பொய்யான சோதனை முடி வைக்கொண்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்தமை என்பவற்றுக் காக, விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனம் சட்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையின் அலட்சியத்தினாலும் மற்றும் தவறான அறிக்கைகள் காரணமாகவும் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ள தாகத் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவிற்கு கொண்டு வரப்பட்ட, ஹிப்போ ஸ்பிரிட் (Hippo spirit) கப்பலில் உள்ள சேதன உரத்தில் அர்வீனியா எனப்படும் தீங்கு விளை விக்கும் பக்டீரியாக்கள் இல்லை என்றும், அதில் அதிக பாதுகாப்பான மற்றும் அதிக திறன் கொண்ட சேதன உரமே இருப்பதாகவும் சீன கிண்டாவோ சீவிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கடிதம் கிடைத்த மூன்று நாட்களுக்குள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த சட்டக் கடிதம் குறித்து தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையின் மேலதிக பணிப்பாளர் வைத்தியர் துஷார விக்கிர மாராச்சியிடம் வினவியபோது, இதுவரை தமக்கு அக்கடிதம் உத்தி யோகப்பூர்வமாகக் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.