சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் – களத்தில் சஞ்சிகை.

You are currently viewing சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் – களத்தில் சஞ்சிகை.

தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையும் வழிகாட்டலும், வழிவரைபடமும் தான் தமிழீழம் என்னும் எமது தாயகத்தை மீட்டெடுக்கும்.

அதன்வழியே தமிழர்கள் நாம் விடுதலைத் தேடிப்பயணிப்போம். காலத்திற்குக் காலம் அரசியல் கத்துக்குட்டிகளும், அடிவருடிகளும், துரோகிகளும் தமிழினத்தை ஏமாற்றிப் பிழைத்த வரலாறுகளை நாமறிவோம். தொடர்ந்தும் எம்மினத்தை ஏமாற்ற நினைத்தாலோ, அல்லது ஏமாற்றும் அரசியல் சதிவலைப்பின்னலின் தளகர்த்தர்களிற்கு  ஆதரவு வழங்கினாலோ, தேசியத்தலைவரின் வழிநடக்கும் மக்கள் உங்களிற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். விழிப்பே விடுதலையின் முதற்படி

சிறிலங்காவின் சனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 16ஆம் திகதிக்குள் நடைபெறவுள்ளதாக தேசியத் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகிவிட்டது.

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் - களத்தில் சஞ்சிகை. 1

தற்போதைய சூழலில் பதவியில் உள்ள ‘அரசியல் குள்ளநரி’ என்று வர்ணிக்கப்படும் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாச, தமிழர்களின் தாயகமான வடக்கு,கிழக்கை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக நிரந்தரமாக பிரிப்பதற்கு காரணமான ஜே.வி.பி இன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிடப்போகின்றார்கள்.

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் - களத்தில் சஞ்சிகை. 2

இந்த மூன்று தலைவர்களும் சிங்கள தேசியவாதத்தினையோ, பௌத்த மேலாதிக்கவாதத்தினையோ கையிலெடுக்காத முற்போக்கான தலைவர்கள் என்று நியாயப்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளார்கள்.

ரணிலைப் பொறுத்தவரையில், நீண்டகாலமாக பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாக ஒற்றுமையை சீர்குலைத்து தனித்தனித்தனியான தரப்புக்களாக மாற்றிவிட்டு,அவ்வாறு பலவீனப்பட்டுள்ள தரப்பினைக் கையாள்வதையே நீண்டகாலமாக நோக்கமாகக் கொண்டிருக்கின்றார்.

சஜித் பிரேமதாசவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே போர்க்குற்றவாளியான சரத்பொன்சேகாவை தன்னுடைய கட்சியின் தவிசாளராக வைத்துக்கொண்டிருந்தவர். தற்போது அவருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் முன்னாள் படை அதிகாரிகளைக் கட்சிக்குள் இணைத்துப்  படையதிகாரிகளின் கூடாரமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்.

அநுரகுமாரவைப் பொறுத்தவரையில் தமிழரின் தாயகத்தினை எப்போதுமே அங்கீகரிக்கப்போவதில்லை என்ற அறிவிப்பைச் செய்துள்ளதோடு, தென்னிலங்கை வாக்குகளைக் கவருவதற்காகத் தேசிய வாதத்தினைத் தீவிரமாகக் கையிலெடுத்துள்ளார்.

இதுவொருபுறமிருக்கையில்,இம்மூவருக்கும் இடையில் முக்கியமான விடயங்களில் ஒற்றுமைகள் உள்ளன. குறிப்பாக, சிறிலங்காவின் இனப்பிரச்சினையின் மூலவேராக்க் காணப்படுகின்ற ‘ஒற்றையாட்சி’ கட்டமைப்பைத் தொடர்ச்சியாக வலிந்து பேணுவது என்பதில் பற்றுறுதியோடு உள்ளனர்.

அதுமட்டுமன்றி, ஒற்றையாட்சிக்குள்ளேயே தமிழர்களுக்கு தீர்வினை வழங்க முடியும் என்பதிலும், அந்த தீர்வானது இந்தியாவினால் வலிந்து திணிக்கப்பட்ட வெற்றுவேட்டாக உள்ள, 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்கம் செய்வது என்பதிலும் கவனமாக உள்ளனர்.

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் - களத்தில் சஞ்சிகை. 3

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இணைந்த வடக்கு,கிழக்குத் தமிழர்களின் தாயக தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அங்கு தமிழர்கள் சுயநிர்ண உரிமையுடன் தலைநிமிர்ந்து வாழ்வதற்காகவும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காவும் சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார்கள்.

இந்தக் கோட்பாட்டுக்காகவே தொடர்ச்சியாக தமது ஆணையையும் வழங்கி வருகின்றார்கள். அப்படியிருக்கையில், தமிழ் மக்களுக்கு ஆகக்குறைந்த அதிகாரங்களைக் கூட வழங்கக் கூடாது, உள்நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை, பொருளாதாரப் பிரச்சினையே காணப்படுகின்றது என்றொரு தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்பும் ரணில்,சஜித், அநுர ஆகிய மூவரில் எவரைத் தெரிவுசெய்வது.

மேற்படி மூவரும் யார் அதியுச்ச சிங்கள, பௌத்த தேசியவாத தலைவர் என்பதை உறுதி செய்துகொள்வதற்கே போட்டியிடுகின்றார்களே தவிரவும், தமிழ் மக்களின் நலன்களை இதயசுத்தியுடன் கையாள்வதற்கு அவர்கள் எள்ளளவும் தயாராக இல்லை.

அவ்விதமானதொரு சூழல் வெளிப்படையாகவே தெரிகின்றபோது எதற்காக தேர்தல் வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும்.  அவ்வாறு பங்கேற்பதன் ஊடாக எதனைச் சாதிக்க முடியும். ஒற்றையாட்சியைக் கைவிடத் தயார் இல்லை என்று கூறும் வேட்பாளர்களுக்காக எவ்வாறு வாக்களிக்க முடியும்.

ஆகவே, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், தேர்தல் புறக்கணிப்பே அவர்களின் முன்னால் காணப்படுகின்ற பிரதான தெரிவாகின்றது. அவ்வாறு தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாக சிறிலங்கா ஆளும் தலைவர்களின் சீத்துவக்கேட்டைச் சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்த முடியும்.

அதுமட்டுமன்றி, சிறிலங்காவின் தென்னிலங்கைத் தலைவர்களின் மிலேச்சமான செயற்பாடுகளையும், இனஅழிப்பை நோக்கிய நகர்வுகளையும், இனப்பிரச்சினையை இருட்டடிப்புச் செய்ய முயலும் சூட்சுமத்தையும் வெளிச்சம் போட்டு காண்பிக்க முடியும்.

ஆகவே,தமிழ் மக்கள் சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது தான் வடக்கு,கிழக்கை தேசமாக ஒருங்கிணைக்கும். அதன் ஒருமித்த குரல் பேரொலியாக பிரதிபலிக்கும்.இதுவே, தமிழினத்தின் முன்னுள்ள வரலாற்றுக் கடமையுமாகும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply