சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணியுங்கள்! ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம்.

You are currently viewing சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணியுங்கள்! ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம்.

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணியுங்கள்.

சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் நாள் நடைபெறவுள்ளது. தாயகத்தில் வாழும் உறவுகள், ஒற்றையாட்சிக்குள் எம்மை அடக்கியாளும் இச்சனாதிபதித் தேர்தலை முழுமையாக புறக்கணிப்பது தான் வரலாற்றுக் கடமையாகும்.

சிங்கள, பௌத்த பேரினவாதத்தினை வரித்துக்கொண்டுள்ள தென்னிலங்கை பெருந்தேசியத் தலைவர்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் ஒட்டுமொத்தமான செய்தியைச் சொல்வதற்குரிய உகந்த காலமாக இக்காலம் கனிந்திருக்கிறது.போருக்குப் பின்னரான 15 ஆண்டுகளில் சிறிலங்காவில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள, பௌத்த மையவாத அரசாங்கங்கள் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புதைத்து, கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை மேற்கொண்டு வந்திருக்கிறது.

அத்தோடு, அதற்குத் துணையாக இந்திய மேற்குலக சக்திகளும் ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச் சட்டத்தினை திணிப்பதற்கே முழுமூச்சாக இயங்கி வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அரங்கம் முதல் அனைத்து சர்வதேச தளங்களிலும் தமிழின அழிப்பிற்கான அனைத்துல நீதிக்கதவுகள் பூட்டப்பட்டு,13ஆவது திருத்தச்சட்டம் பற்றிய வலியுறுத்தலும் அதுவே தமிழினத்திற்கான தீர்வுமென பேசப்படுவதற்கான பின்னணிக் காரணம் இதுவே ஆகும். ம்

நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களான அநுரகுமார திசாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, நாமல் இராயபக்ச ஆகிய அனைவரும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதையே இலக்காகக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, 34 வழக்குகள் மூலமாக மத்திய அரசாங்கம் மீளப்பறித்துக் கொண்ட அதிகாரங்களை வழங்காது, காணி,பொலிஸ் அதிகாரம் பற்றி பேச்சுக்கே தயராக இல்லாத சூழலிலும் தான் 13ஆவது திருத்தச்சட்டத்தினை,ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான கருவியாக சிறிலங்கா அரசாங்கமும் அதன் நட்புச் சக்திகளும் பார்க்கின்றன. அதேநேரம், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். இந்தக் கருத்திட்டத்தின் ஆரம்பம் முதல் தற்போதைய நகர்வுகள் வரையில் அதன் பின்னணி, இலக்கு என்பன தொடர்பில் பல்வேறு கொள்கை முரண்பாடுகளும், முன்னுக்குப் பின்னான நேர்மையற்ற, செயற்பாடுகளும், கருத்து வெளிப்பாடுகளும்

வெளிப்படைத்தன்மையற்ற  கொண்டதாக அமைந்திருக்கின்றன.

உதாரணமாகக் கூறுவதாக இருந்தால், தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சியை நிராகரிப்பதாகக் கூறியிருந்தாலும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை குறிப்படுவதற்கு தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் பங்கேற்றுள்ள 14 அங்கத்தவர்களும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகளும், கட்சிகளும் எள்ளளவும் விரும்பவில்லை.

அதற்கான காரணம், தமிழ் மக்களின் அபிலாசைகளை விடவும் இந்தியாவைப் பகைத்துவிடக்கூடாது என்ற மனோநிலையில் அத்தரப்புக்கள் அனைத்துமே இந்திய நலனை கருத்திற்கொள்வதனாலேயே ஆகும்.

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பான செயல் என்பதை

மறுப்பதற்கில்லை.

தற்போது சிறிலங்கா சனாதிபதி தேர்தல் போட்டிக்களத்தில் உள்ள எந்தவொரு வேட்பாளரும் தமிழ் மக்களின் நீண்டகாலப் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு சம்பந்தமாகவோ, தமிழினப் படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறவோ தயாராக இல்லை.

அதுமட்டுமன்றி, தமிழினம் முகங்கொடுக்கும் உடனடிப்பிரச்சினைகளான, தமிழ் மக்களின் நிலங்கள், புலங்கள், கலாசார அடையாளங்கள், பண்பாட்டு விழுமியங்கள் அபகரிக்கப்படுதல், ஆக்கிரமிக்கப்படுதல், காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுளின் போராட்டங்கள் உள்ளிட்ட எந்தவொரு விடயங்கள் சம்பந்தமாகவும் உரையாடலுக்குக் கூடத்தயாராக இல்லை.

இத்தருணத்தில் தாயக மக்களின் வாக்குகளின் பெறுமதி மிகவும் அதியுயர்வானது. அந்த வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டிருக்கின்றன.

ஆகவே, அந்த தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் வாக்குகளை ஆயுதமாக்கி தாயக மக்கள் எந்தவொரு வேட்பாளரும் தமது அடிப்படை உரித்தான சுயநிர்ணயத்தையே உறுதிப்படுத்த தயாரில்லை என்பதை ஒட்டுமொத்த உலகத்துக்கும் வெளிப்படுத்துவதற்கு இருக்கின்ற ஒரேவழி தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பது தான்.

எனவே அன்பிற்குரிய உறவுகளே! தமிழ் மக்களின் அபிலாசைகளை ஆணித்தரமாக உலகறியச் செய்வதற்கு மட்டுமன்றி, தென்னிலங்கையில் ஒற்றையாட்சியை வரித்து, கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை மேற்கொள்ளும் பௌத்த மேலாண்மை வேட்பாளர்களுக்கும் தமிழினத்தின் புறக்கணிப்பு பெரும் செய்தியொன்றைச் சொல்லும்.

இந்தப்புரிதலுடன் தாயக உறவுகள் அனைவரும் அலையெனத் திரண்டு தேர்தலில் வாக்களிப்பை புறக்கணித்து, தமிழினத்தினத்திற்கு தன்னாட்சி உரிமையே வேண்டுமென்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்துவோம்.

தமிழரின் தாகம்  தமிழீழத் தாயகம்

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணியுங்கள்! ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம். 1
சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணியுங்கள்! ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம். 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments