





ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை சரியான முறையில் நடத்தும் வகையில் இனப்படுகொலை குற்றம் புரிந்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துர்மாறு வலியுறுத்தி யாழ். நல்லூரில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று ஆரம்பித்துள்ளது.
யாழ். பல்கலைக் கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார் இணைந்து முதலாவது நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக் கிழமை மு.பகல் 10.00 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்கு முன்பாக குறித்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இப்போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் முழு ஆதரவை வழங்கியுள்ளது.