சிறிலங்கா அரசு வெள்ளை வானை இனி அனுப்ப முடியாது – ஜஸ்மின் சூக்கா

You are currently viewing சிறிலங்கா அரசு வெள்ளை வானை இனி அனுப்ப முடியாது – ஜஸ்மின் சூக்கா

போர் முடிவடைந்த பின்னர் ஒருதசாப்த காலத்திற்கும் மேலாக போரில்

தமது உடன் பிறப்புக்கள் காணாமற்போன தமிழ் இளைஞர்கள் உண்மையைக்

கேட்டதற்காக ஒரு பயங்கரமான விலையைக் கொடுத்திருக்கின்றார்கள்’

எனவும் சர்வதேச காணாமலாக்கப்பட் டோர் தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள

அறிக்கையில் சூக்கா கூறியுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாதவது:-

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மட்டும்

அறிய விரும்பியவர்கள் மீது இலங்கை அரசானது வெள்ளை வானை அனுப்பி

துன்புறுத்துவதை தொடரமுடியாது என காணாமற்போனவர்களுக்கான

இந்த சர்வதேச நாளில் நாம் இலங்கை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துகின்றோம்.

பிரிட்டனில் அகதிகளாக இருப்பவர்கள் மனித உரிமைகள் பற்றிய முக்கிய

செயற்பாட்டாளர்கள் இல்லை. இவர்கள் பெயர்களைச் சேகரித்த அல்லது

ஆர்ப்பாட்டங்களுக்கு உதவி செய்த அல்லது காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு உதவி செய்த இளைஞர்கள்

ஆவர். 

இவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பாரிய ஆபத்துக்கள் பற்றி எந்தவித

எண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை – தான் பதின்ம வயதினனாக இருப்பதனால்

இராணுவம் என் மீது எந்த அக்கறையும் கொண்டிருக்காது என தனக்குச்

சொல்லப்பட்டதாக ஒருவர் தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது

அவர்கள் குதிக்காலில் அடித்தல், பால்உறுப்புக்கள் மீது தாக்குதல் நடத்துதல்,

சிகரெட்டினால் சுடுதல், சூடாக்கப்பட்ட ஒரு இரும்புக் கம்பியால் சூடு வைத்தல்

, தண்ணீர் சித்திரவதை, மூச்சுத்திணறச் செய்தல், வலி ஏற்படும் விதமான

நிலையில் கட்டித்தூக்குதல், போலி மரண தண்டனைகள் , மரண அச்சுறுத்தல்கள ; 

அத்துடன் கூட்டுப்பாலியல் வன்புணர்வு உட்பட்ட பாலியல் வன்புணர்வு போன்ற

மிருகத்தனமான சித்திரவதைகளை பாதுகாப்புப் படைகளின் கைகளில்

அனுபவித்துள்ளார்கள். தமக்கு உரித்துடைய நீதியைக் கேட்கும்

செயல்முறையில், இந்தக் குடும்பங்கள் பலதடவைகள் பலியாக்கப்பட்டுள்ளார்கள்.

– உண்மையைக் கண்டறிவதில் அக்கறைஎதுவுமே கொண்டிராத ஒரு அரசே

இதற்கான முழுப் பொறுப்பையும்கொண்டுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும்நீதிக்கான செயற்திட்டத்தின்காணாமற்போனவர்களுக்கான

இணையத்தளமானது 18 மே 2009 அன்று அல்லது அதனை அண்டிய

நாட்களில் அரச பாதுகாப்பில் இருந்து

காணாமற்போனதாகச் சொல்லப்படும் 340 தமிழர்களின் பெயர்கள்

மற்றும் படங்களைக் கொண்ட ஒரு களஞ்சியமாகும்.

இலங்கை இராணுவத்திடம் அவர்கள் சரணடைவதைக் கண்ட

பல சாட்சிகள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். ஆச்சரியம் தரும்

வகையில் சரணடைவுகள் இடம்பெற்ற போது அங்கு பிரசன்னமாகியிருந்த

தற்போதைய இராணுவத்தளபதி , சவேந்திர சில்வா உட்பட்ட இராணுவ

ஜெனரல்கள் 29 சிறார்கள் உட்பட காணாமற்போன நூற்றுக்கணக்கான

காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவர்களுக்கு

என்ன தெரியும் என்பது பற்றி காணாமற்போனவர்களுக்கான

அலுவலகத்தினால் ஒரு தடவை கூட விசாரிக்கப்படவில்லை.

மே 2018 இல், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம்ஆனது காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்திற்கு 18 மே இல்

காணாமற்போனவர்கள் பற்றிய வழக்கினை  முதலில் விசாரிக்க வேண்டும் எனவும் 18

மே சரணடைவுகளை தனிப்பட்டமுறையில் அவதானித்ததாக கண்ணால்கண்ட

சாட்சியாளர்களால் சொல்லப்படும் சவேந்திர சில்வா மற்றும் ஜெகத்ஜெயசூரியா

போன்ற இராணுவ அதிகாரிகளை விசாரணைக்குட்படுத்தலே முதற்படியாக

இருக்க வேண்டும் எனவும் எழுதியிருந்தது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரே

நாளில் நூற்றுக்கணக்கான ஆட்கள் காணாமற்போனமையும் அத்துடன் ஒரு

தசாப்த காலம் கடந்து விட்ட பின்னரும் இராணுவத்திலுள்ள எவரும் விசாரணைக்கு

கூட உட்படுத்தப்படவில்லை என்பதும் . இடைநிலை நீதிச் செயற்பாடு

ஒன்று இருப்பதாக எண்ணும் சர்வதேச சமூகமானது நீதியைக் கோரும்

குடும்பங்களுக்கான ஒரு தார்மீகப் பொறுப்பை தற்போது கொண்டுள்ளது.

புதிய அரசுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்துவதற்காகஅரசியல்வாதிகளுடனும்

ஜெனரல்களுடனும் கை குலுக்குவதற்குவரிசையில் நிற்பதற்குப் பதிலாக

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள்உண்மைக்காக காணாமற்போனவர்களின்

குடும்பங்கள் மற்றும் அவர்களது துணிச்சலான சட்டவாளர்களது தாகத்தினை பாதுகாப்பதற்கும்தமது தொடர்ச்சியான ஆதரவினை வெளிக்காட்டவும் அவர்களுடன் நின்றுபடம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

திகைக்கவைக்கும் வகையில்,பாதிக்கப்பட்டவர்கள் மீது முற்றிலும்

வெறுப்பினை வெளிக்காட்டும்வகையில், ஊடக அமைச்சர் கெஹலிய

ரம்புக்வெல இலங்கையிலுள்ளகாணாமற்போனவர்களுக்கான

அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டமுறைப்பாடுகளில் உள்ளவர்களில்

அரைவாசிப் பேர் உண்மையில்வெளிநாடுகளில் வசித்து வருகின்றார்கள்

என தெரிவித்துள்ளார் எனஅறிவிக்கப்படுகின்றது .

காணாமற்போனவர்களுக்கானஅலுவலகமானது தனிப்பட்ட

நபர்கள் பற்றிய 14,641 கோவைகள் தம்மிடம் இருப்பதாகவும் அத்துடன்

129 மேலதிக புதிய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும்

ஐ.நாவிற்கு அறிவித்துள்ளது. ‘ காணாமற்போனவர்களின் குடும்பங்கள்

அனுபவித்துவரும் முடிவில்லாத துன்பங்களை கடுமையான மற்றும்

அவமரியாதையான முறையில் நிராகரித்து அவர்களை இழிவுபடுத்தும் ஆதாரமற்ற

கருத்துக்களை வெளியிட்டமைக்கான இந்த அமைச்சர் விளக்கமளிக்க அழைக்கப்படுதல் அவசியமாகும்-என்றுள்ளது

பகிர்ந்துகொள்ள