சிறீதரனுக்கு கட்சி சார்பில், எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை;சாணக்கியன்.

You are currently viewing சிறீதரனுக்கு கட்சி சார்பில், எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை;சாணக்கியன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்புக்கும் தமிழரசு கட்சிக்கும் சம்பந்தமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (R. Shanakiyan) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி, தமிழ்த்தேசிய கொள்கையை வலியுறுத்தும் மூன்று முக்கிய கட்சியினருக்கு இடையில் கலந்துரையாடல் நடத்த தீர்மானிப்பதற்கு சிறீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்படி கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு சிறீதரனுக்கு கட்சி சார்பில், எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என இராசமாணிக்கம் சாணக்கியன் கூறியுள்ளார்.

அத்துடன், இது ஒரு தனிப்பட்ட பேச்சுவார்த்தையாக இருக்கலாமே தவிர கட்சியில் இருந்து உத்தியோகபூர்வ பங்கேற்பு இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply