சிறீலங்காவால் நிகழ்ந்த சம்பவங்களை காசா நினைவுபடுத்துகின்றது!

You are currently viewing சிறீலங்காவால் நிகழ்ந்த சம்பவங்களை காசா நினைவுபடுத்துகின்றது!

காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கை உட்பட பல நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான செயலாளர் நாயகம் டொம் பிளெச்சர் இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் காசாவில் அழிவின் அளவு குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்,இலங்கை உட்பட நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற அட்டுழியங்களை சர்வதேச சமூகம் தடுக்க தவறியதை காசா நிலைமையுடன் ஒப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மனித உரிமை மீற்ல்கள் பாரியளவில் மீறப்பட்ட முன்னைய சந்தர்ப்பங்களில் ஐநா செயற்பட்ட விதம் குறித்த முந்தைய மீளாய்வுகளில்,மியன்மார் இலங்கை ருவாண்டா போன்ற நாடுகளில் இழைக்கப்பட்ட மீறல்களின் அளவு குறித்து ஐநா பேசத்தவறியது என தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே கொல்லப்பட்டவர்களிற்கும் மௌனமாக்கப்பட்டவர்களிற்கும் என்ன ஆதாரங்கள் தேவை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்?

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் வேண்டுமென்று வெட்கம் அற்று மனிதாபிமானமற்ற நிலைமையை இஸ்ரேல் உருவாக்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply