சிறீலங்காவின் பொது தூபி அமைப்பிற்கு விக்கி ஆதரவு!

You are currently viewing சிறீலங்காவின் பொது தூபி அமைப்பிற்கு விக்கி ஆதரவு!

இராணுவத்திற்கும் புலிகளுக்கும் பொது நினைவுத்தூபி! ஒரணியில் விக்னேஸ்வரன், டக்ளஸ்! ஏனையோர் எதிர்ப்பு!!

இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கும் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்களுக்கும் ஒரே இடத்தில் அஞ்சலி என்பதை ஏற்க உங்களால் எவ்வாறு முடிந்தது விக்கினேஸ்வரன் ஐயா அவர்களே?

சில வருடங்களுக்கு முன்னர் உங்களை உங்கள் கட்சியே முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றி அரசியலிலிருந்து அப்புறப்படுத்த முற்பட்டபோது, கட்சி பேதங்களைக் கடந்து உங்களுக்காக வீதிக்கு இறங்கியதையிட்டு வெட்கப்படுகின்றேன்! வேதனைப்படுகின்றேன்!

இனி ஒரு நிமிடங்கூட தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கத் தகுதியற்றவர் நீங்கள்!

க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply