சிறீலங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!

You are currently viewing சிறீலங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!

இரண்டு பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மொனராகல நாமல்ஓய மற்றும் இங்கினியாகல பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இவ்வாறு நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை நாமல்ஓய பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சக உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தானும் துப்பாக்கியினால் சுட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இங்கினியாகல நெல்லியத்த பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments