இலங்கையில் தீவிரம் பெற்றுள்ள கொரோனாப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் விபரம் வருமாறு,
அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீடுகளிலிருந்து ஒருவர் மட்டும் வெளியே செல்லலாம்.
உடற்பயிற்சி மையங்கள், மசாஜ் நிலையங்கள், சிறுவர் விளையாட்டுப்பூங்காக்கள், உள்ளக விளையாட்டு அரங்குகள், நீச்சல்தடாகங்கள் என்பன ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை மூடப்படுகின்றன.
அதேபோல,
இசை நிகழ்வுகள், கடற்கரையோர விருந்துக் கொண்டாட்டங்கள், களியாட்ட விழாக்கள் என்பன நடத்தவும் தடைவிதிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
இவற்றோடு அறநெறி பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதனை நிறுத்துமாறும் புதிய சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீடுகளில் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடாத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக புதிய சுகாதார வழிகாட்டியில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.