இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1998 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தொற்றுக்குள்ளான அனைவரும் அமெரிக்காவில் இருந்து வருகை தந்தவர்கள் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேலும் 14 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.