சிறீலங்காவில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை நாட்டில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரண்டு புதிய நோயாளர்கள் அடையாயம் காணப்பட்டிருந்தனர்.
இதேவேளை இதுவரை 38 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான 134 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.