கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரால் புணரமைக்கப்பட்ட பொழுதுபோக்கு மையத்தில் வைத்து சிறீலங்கா இன அழிப்பு படை இராணுவ உத்தியோகத்தர் மீது இராணுவ தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 06.02.2025 அன்று இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்ய முற்பட்ட இராணுவ உத்தியோகத்தர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.