தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களை சிறீலங்கா காவற்துறை துரத்திச் சென்ற போது, வேகமாக சென்றஅவர்கள் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினர்.யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. விபத்தில் காயமடைந்தவர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர் தப்பிச் சென்றுள்ளார்.