சிறீலங்கா காவற்துறையின் அச்சுறுத்தல்களை உடைத்து உணர்வோடு நடைபெறும் போராட்டம்!

You are currently viewing சிறீலங்கா காவற்துறையின் அச்சுறுத்தல்களை உடைத்து உணர்வோடு நடைபெறும் போராட்டம்!
தையிட்டியில் தனியார் காணியில்  திஸ்ஸ விகாரை  என்கின்ற பெயரில் சிங்கள அரசு மேற்கொண்ட பௌத்த மயமாக்கலுக்கு  எதிராக கடந்த (22.05.2023) ஆம் திகதியில் இருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது, போராட்டக்காரர்களையும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த, கான்ஸ்டபிள் தரமுடைய சிறீலங்கா காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்ட நிலையிலும்  தொடர்ந்து   போராட்டம்  நடந்தது

அதனை தொடர்ந்து  மூன்றாம் கட்டமாக 03.06.2023   அன்று தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு  பௌத்த மயமாக்கலுக்கு எதிராக   போராட்டம் தொடர்ந்தது

நான்காம் கட்டமாக நேற்றைய தினம்  (02) மீண்டும் ஆரம்பமாகிய போராட்டம் நள்ளிரவை கடந்தும் இன்றைய தினத்திலும் தொடருகின்றது

போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

போயா தினத்தினை முன்னிட்டு தையிட்டி விகாரையில் நடைபெறும் வழிபாடுகள் மற்றும் சிங்கள மக்களின் வருகையினை தடுக்கும் நோக்கிலும் விகாரையை அகற்றக் கோரியும்  குறித்த  பௌத்த மயமாக்கல்  எதிர்ப்புப் போராட்டம்  தையிட்டிப் பகுதியில் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்   2வது  பாதையில் புதிய ஆர்ப்பாட்டக்களத்தில்   சிங்கள காவல்துறை அச்சுறுத்தல்களை உடைத்து  போராட்டம்  தொடர்ந்து நேற்றும் இன்றும் நடைபெற்று வருகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply