இது எங்களுக்கான தேர்தலா?
இந்தியாவின் முழுச்செலவில் இந்தியாவின் பூகோள அரசியலைப் பலப்படுத்த தமிழர் அரசியல் என்று ஏமாற்று அரசியல் செய்யும் கூட்டணிக்கான செய்தி இது.
ஜனநாயக உரிமையை மறுக்கக்கூடாது என்பதற்காக தமிழ் மக்களின் அரசியல் கொள்கைகளை கைவிட்டு எதிரிகளின் அரசியலை பலப்படுத்த துடிக்கும் இந்தக் கூட்டணிகள் என்னத்தை சாதிக்கப் போகின்றது என்பதற்கு கடந்த கால வரலாறு உதாரணம்.
இந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கின்றது ஒவ்வொரு கட்சியும் தமிழினத்தின் கொள்கையை விட்டு வெற்று ஒற்றுமை என்ற பெயரில் சிறீலங்கா ஒற்றையாட்சி அரசியலை ஆதரித்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தமிழ் மக்களின் அரசியல் அழிவுக்கு மூலகாரணமாக அமையும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
புத்தி யீவிகள் இணைந்து இருக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு எங்கள் கொள்கையை அழிக்கமுனையும் யாராக இருந்தாலும் நாங்கள் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும்.
ஸ்ரீலங்கா அரசியலை புறக்கணிப்பது கோமாளி என்றால் அந்த அரசியலை ஆதரிப்பது அதைவிட கோமாளிகள் என்பதை எம்மால் உரக்க சொல்ல முடியும்.
இந்தக் கூட்டணியில் இருக்கும் தனி நபர்கள், கட்சிகள், ஆய்வாளர்கள் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் கடந்த 15 வருடமாக என்னென்ன முகத்தோடு தோன்றினார்கள் யாருடைய நிகழ்ச்சி நிரலில் இயங்கினார்கள் என்பது நிச்சயமாக எல்லோருக்கும் தெரியும்.
எங்களைப்றுத்தமட்டில் தமிழினத்தின் கொள்கையை கைவிட்டு விட்டு வெறும் வெற்று ஒற்றுமைக்காக வாக்கு வேட்டை நடத்துவோர்களை நாங்கள் முற்றாக எதிர்கின்றோம், சங்கு நாளை வெற்றி பெறலாம் அதற்கு ஆச்சரியம் இல்லை காரணம் இந்தியாவில் எப்படி சலுகை அரசியலை மக்கள் செய்வதற்கு பழக்கப்படுத்தினார்களோ அப்படி ஒரு சலுகை அரசியலை தாயகத்திலும் இந்திய அரசியல் பின்னணியை கொண்டு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.
பிரியாணிக்கும் ரூபா நோட்டுகளுக்கும் வாக்கு போட வைக்கின்ற நிலைமைக்கு எங்கள் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் ஆகவே சங்கு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை அத்தோடு தமிழரின் அரசியலில் ஒளிக்கீற்று தோன்றப்போவதுமில்லை ஆனாலும் எங்கள் உறுதியான கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கின்றோம்,
இந்த அரசியல் என்பது தமிழ் மக்களுடைய அரசியலை சாக்கடையில் வீழ்த்தி மீண்டும் அடிமை நிலைக்கு தள்ளி விடுகின்ற ஒரு பாதகச் செயல் என்பதை நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம்.
இந்த கூட்டணியில் இருக்கின்ற ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்தியாவின் ஒட்டுண்ணிகளாக இதுவரை அரசியல் செய்து வந்துள்ளார்கள் இனியும் அதைத்தான் செய்யப்போகின்றார்கள்.
சிறீலங்கா சனாதிபதி தேர்தல் அடிப்படையில் தமிழருக்கானது அல்ல அது சிறீலங்காவுக்கானது எங்களை ஆக்கிரமித்து நிற்கும் அண்டைநாடு செய்யும் அரசியலுக்கு இவ்வளவு அலப்பறைகள் தேவையில்லை
சிறீலங்கா அரசியலை புறக்கணித்துவிட்டு தமிழர் அரசியலை பலப்படுத்துவதே தமிழரின் காலக்கடமையாக அமையவேண்டும்.