ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக வெற்றியாளரின் அறிவிப்பு இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் நம்பப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது.
அத்துடன் வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும்.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.