சிறீலங்கா பழிவாங்கல்களை நிறுத்தவேண்டும்!மனிதவுரிமை அமைப்பு

You are currently viewing சிறீலங்கா பழிவாங்கல்களை நிறுத்தவேண்டும்!மனிதவுரிமை அமைப்பு

இலங்கை அதிகாரிகள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிற்கு எதிரான அனைத்து வகையான பழிவாங்குதல்களையும் நிறுத்தவேண்டும் நியாயபூர்வமான அதிருப்தி மற்றும் பிரச்சாரங்களில்  ஈடுபடும் மனித உரிமை பாதுகாவலர்களை இலக்குவைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச தமிழர்களின் விழாவான தைப்பொங்கலை குறிக்கும் விதத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டவேளை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக நீர்த்தாரை பிரயோகம் இடம்பெற்றதை கண்டிப்பதாக புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல் கைதிகள் விடுதலை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவிக்கவேண்டும் பலவந்தமாக காணாமல்போனவர்களிற்கான நீதி போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர் என தெரிவித்துள்ள புரொன்டலைன் டிபென்டர்ஸ் அமைப்பு கருத்துவெளிப்பாடு மற்றும் ஒன்றுகூடுதலிற்கான தங்கள் உரிமையை பயன்படுத்திய அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக அரசாங்கம் அளவுக்கதிகமான பலத்தை பயன்படுத்தியது என குறிப்பிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களில் தங்கள் நேசத்திற்குரியவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு தசாப்த காலத்திற்கு மேல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களும் உள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிற்கு எதிரான அனைத்து வகையான பழிவாங்குதல்களையும் நிறுத்தவேண்டும் நியாயபூர்வமான அதிருப்தி மற்றும் பிரச்சாரங்களில்  ஈடுபடும் மனித உரிமை பாதுகாவலர்களை இலக்குவைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் புரொன்ட்லைன் டிபென்;டர்ஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply