டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் தீங்கான விளைவுகளில், இருந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க சுவிஸ் செனட் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை அணுகுவதற்குத் தடைவிதிப்பது குறித்தும், இது சிறார்களின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
எதிர்ப்பு இல்லாமல் அரச கவுன்சில் செவ்வாயன்று இரண்டு முன்மொழிவுகளை அங்கீகரித்தத. அதற்கு மத்திய கவுன்சில் ஒப்புக்கொண்டது.
பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களைத் தடை செய்வது மற்றும் சிறார்களைப் பாதுகாக்க என்ன செய்ய முடியும் என்பதை தேசிய அரசாங்கம் ஆராய உள்ளது.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு டிக் டொக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை அணுகுவதைத் தடை செய்த முதல் நாடாக அவுஸ்ரேலிய அரசாங்கம் உள்ளது.
இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ் மற்றும் நெதர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில், பாடசாலைகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் உள்ளன.